திருச்சி அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினின் அடியில் சிக்கியதால் நடுவழியில் ரயில் நின்றது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு ஓட்டுநர் , ரெயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்ட நிலையில், மற்றொரு டயர் ரயில் எஞ்சினில் சிக்கியது.
இதனையடுத்து, ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எஞ்சினில் சிக்கிய டயரை வெளியே எடுத்து சரி செய்த பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச்சென்றது. அதிர்ஷடவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், தண்டவாளத்தில் டயர்களை வைத்த விஷமிகள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.