சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மாறியுள்ளது. அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் கடைசி தம்பி கண்ணனின் ஊதாரித்தனம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் கதிர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது 5 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தி மூர்த்தி, ஜீவா உள்ளிட்டவர்கள் கதிரை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
கண்ணன் -ஐஸ்வர்யாவிற்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. சேனலின் இந்த வார டிஆர்பியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது. சேனலின் முதன்மை தொடராக பாக்கியலட்சுமி உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் இந்தத் தொடர் உள்ளது. அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர், தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை வெளியிட்டு வருகிறது.
ஒன்றாக ஒரே குடும்பமாக இருந்த நால்வரும், பிரச்சினை ஒன்றின்மூலம் மூனறு குடும்பமாக பிரிந்தனர். ஜீவா தன்னுடைய மாமனார் வீட்டுடன் தங்கிவிட, தனியாக வாழ்ந்து காட்டுவதாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, கண்ணன் -ஐஸ்வர்யாவும் தனியாக சென்ற நிலையில், தனிக்குடித்தனம் போனவுடன் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கி குவிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யாவின் வளைகாப்பிற்காகவும் லட்சக்கணக்கில் வட்டிக்கு வாங்குகின்றனர்.
இதனிடையே, கிரெடிட் கார்ட் பணத்தை செலுத்த கூறி, வங்கி ஊழியர்கள், தொடர்ந்து வீட்டிற்கு வருகின்றனர். ஒரு கட்டத்தில் கண்ணனை அடித்துத் துவைக்கும் அவர்கள், ஐஸ்வர்யாவையும் தவறாக பேசுகின்றனர். இதை கேள்விப்படும் கதிர், வங்கி ஊழியர்களை அடித்து காயமேற்படுத்துகிறார். தொடர்ந்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கதிர்மீது கொலை முயற்சி வழக்கு போடப்படுகிறது. இதனால் குடும்பமே அல்லோல கல்லோல படுகின்றனர்.
தொடர்ந்து மூர்த்தி உள்ளிட்டவர்கள் முயற்சியில் வங்கியில் 5 லட்சம் பணம் செலுத்தி கதிரை மீட்டு கொண்டு வருகின்றனர். கதிரை மீட்க தனம் தன்னுடைய மற்றும் தன்னுடைய குழந்தையின் நகைகளையும் கழற்றித் தருகிறார். ஜீவாவின் மாமனாரும் தன்னுடைய பங்கிற்கு உதவி செய்கிறார். ஆனால் அதற்கான அவசியம் ஏற்படாமல் போகிறது. கதிர் மீண்டும் வீட்டிற்கு வருகிறார். இதனால் அங்கு நெகிழ்ச்சியான சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய தவறால் ஒட்டுமொத்த குடும்பமும் காவல்நிலையத்திற்கு வரும் சூழ்நிலையை தான் ஏற்படுத்தியதன் குற்ற உணர்ச்சியால் கண்ணன் தவிக்கிறார். ஒருபுறம் ஐஸ்வர்யாவின் வளைகாப்பும் நின்று போனதால், அவருடைய சித்தியிடம் வாங்கிய 2 லட்சம் ரூபாய் வீணாகிறது. கிரெடிட் கார்ட் கடனை மூர்த்தி தீர்த்துள்ள நிலையில், தற்போது சித்தியிடம் வாங்கிய கடன் அடுத்ததாக கண்ணனுக்கு அடியாக மற்றும் இடியாக இறங்க காத்திருக்கிறது.
தான் மிகவும் மோசமானவர்களிடம் கடன் வாங்கியுள்ளதாகவும் கடனை கொடுக்கவில்லை என்றால் அவர்களுடைய மூவ் மிகவும் மோசமாக அமையும் என்றும் ஐஸ்வர்யாவின் சித்தி கூறுகிறார். இதனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலக்கமடைகின்றனர். அடுத்ததாக அவர்களின் வாழ்க்கையில் இந்தக் கடன் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை தன்னுடைய வீட்டிற்கே மீண்டும் கதிர் அழைத்து வருகிறார். இதை முதலில் கேள்வி கேட்கும் தனம், பின்னர், மூர்த்தியை சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று கூறி அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கிறார். இதையடுத்து மூர்த்தி எத்தகைய வகையில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார் என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் குடும்பத்தினர் மீண்டும் இணைவது வரவேற்கத்தக்கதுதான்.