அமெரிக்க விமானப்படை அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் திடீரென தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
80 வயதான ஜோ பைடன், விமானப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு திரும்பிய போது, கால் இடறி விழ, உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர்.
பின்னர் எழுந்து நடந்துச் சென்ற ஜோ பைடன், தனது இருக்கையில் அமர்ந்தார்.
விழா மேடையில் இருந்த மணல் மூட்டை தடுக்கி பைடன் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோ பைடன் நலமாக இருக்கிறார் என்றும் பாதிப்பு ஏதுமில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.