இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அடுத்த ரிலீஸ்பிரின்ஸ் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அஸ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மண்டேலா என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை மாவீரன் திரைப்படம் பூர்த்தி செய்யும் என ரசிகர்களால் நம்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் வித்யாசமான ரோலில் நடிப்பதாகவும், இப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றும் தகவல் வருகின்றன. எனவே மாவீரன் திரைப்படம் ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது
விறுவிறுப்புமுதலில் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதால் மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மாவீரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்திற்காக டப்பிங் கொடுத்து வருகின்றார். இதன் வீடியோ கூட சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இம்மாதம் மாவீரன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
முக்கியமான படம்மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ரங்கூன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகின்றார். ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்திற்காக பிரத்யேகமாக பல பயிற்சிகளை சிவகார்த்திகேயன் மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
கண்டிஷன்இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கண்டிஷன் போட்டுள்ளதாக சிவகார்திகேயனேசமீபத்திய விழா ஒன்றில் பேசியுள்ளார். உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயனும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தன் தலையை தொப்பியின் மூலம் சிவகார்த்திகேயன் மறைத்துக்கொண்டு இந்த விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் , ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நான் நடித்து வரும் படத்திற்காக புதிதான ஹேர் ஸ்டைல் ஒன்றை வைத்துள்ளேன். எனவே அப்படத்தின் முதல் பார்வை வெளியாகும் வரை அந்த ஹேர் ஸ்டைல் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என இயக்குனர் சொல்லிவிட்டார். அதனால் தான் என் தலையை தொப்பியை கொண்டு மறைத்துள்ளேன் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இதைக்கேட்ட ரசிகர்கள் சிலர் ராஜ்குமார் பெரியசாமி ரொம்ப ஸ்ட்ரிக்டான இயக்குனரா இருப்பாரு போல என கமன்ட் அடித்து வருகின்றனர்