தமிழகத்தில் தற்போது கத்தரி எனும் அக்னி நட்சத்திரம் வெயில் காலம் முடிந்தாலும் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இன்று நேற்றைய விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை வானிலை மைய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இதில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 108 ஃபாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும், கரூர், கடலூர், ஈரோடு, மதுரை, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், பரங்கிப்பேட்டை, திருச்சி, திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.