தென்காசி மாவட்டம் புளியரையில் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோட்டைவாசல் கருப்ப சுவாமி கோவிலில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரப்பட்டியைச் சேர்ந்தவர்களும், புலியரை தெற்கு மேட்டைச் சார்ந்தவர்களும் வழிபாடு செய்தனர். அப்போது திடீரென இரு தரப்பைச் சார்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பு இளைஞர்களும் மாறி மாறி விறகுக் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதில் 9பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சங் சம்போ சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.