குஜராத்,
குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக பார்மெக்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.