கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
மதுரையை சேர்ந்த ஒருவர் தனது காருக்கு இங்கு பெட்ரோல் நிரப்பியபோது வாகனம் திடீரென பழுதடைந்ததாக புகார் தெரிவித்தார். இதனை அடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தியது மட்டுமின்றி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.