சேலம் இளைஞர் கோகுல் ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 குற்றவாளிகளின் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதை குறித்து சீமான் ரியாக்ஷன்.
10 குற்றவாளிகள்சேலம் இளைஞர் கோகுல் ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. அதேபோல, வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட யுவராஜின் ஓட்டுநர் அருண் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை, இதர குற்றவாளிகளான குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஆகிய 5 பேருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஒரு வழக்கு பல இழப்புதமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜின் கொலை வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக யுவ்ராஜ் இருந்தார். யுவராஜுக்கு போலீசில் பலரே பக்கபலமாக இருந்த நிலையில் பரபரப்பாக வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், கோகுல் ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு யுவராஜ் போன் செய்து போக்கு காட்டி வந்ததால் விஷ்ணுபிரியா உச்சகட்ட மன அழுத்தத்துக்கு ஆளானார். அதனை அடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி காவலர் குடியிருப்பில் விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மவுனம் ஏன்?கோகுல் ராஜ் வழக்கை தூசி தட்டி பார்த்தால் ஆதிக்க சாதியினரின் பண, படை பலம் எந்த அளவுக்கு சட்டத்துக்கு சவாலாக இருந்துள்ளது என்பதை அறிய முடியும். இந்த நிலையில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளது. பல அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் உள்ளன. குறிப்பாக அதிமுகவை சார்ந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்க்கவும் இல்லை; ஆதரவும் தெரிவிக்கவில்லை. குற்றவாளி யுவராஜ் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அதிமுக வட்டாரம் இந்த விஷயத்தில் மவுனம் காப்பதாக விமர்சிக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சியும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
சீமான் அறியாமல் பேசிவிட்டாரா?இதுகுறித்து சீமான் ஏற்கனவே கூறியிருந்த கருத்தும், இப்போதும் கூறியுள்ள கருத்தும் தற்போது வைரலாகி வருகிறது. சீமான் பழைய வீடியோவில் பேசுவது; காதலிக்கும் ஒரு பையன் இளவரசனாகட்டும், கோகுல் ராஜாக இருக்கட்டும் காதல் எதிர்ப்புக்கு எதிராக யுத்தம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்வது தவறு. அவர்கள் எங்களை போன்ற அமைப்புகளிடம் வந்து உதவி கேட்டிருக்கலாம்.. காவல்துறையை நாடி இருக்கலாம்.. அதுபோல எத்தனையோ சாதி கலப்பு திருமணங்களை நடத்தி இருக்கிறோம்.. ஆனால் காதலுக்காக அற்பமாக உயிரை பறிகொடுப்பதுதான் வேதனையாக இருக்கிறது ‘ என்று சீமான் கோகுல் ராஜின் மரணம் ஒரு தற்கொலை என்பதை போல அப்போது பேசியதாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போதைய கருத்து
இந்த நிலையில் நேற்றைய தினம் கோகுல் ராஜ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சீமான் ‘ அது.. நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது… அந்த செய்தியை நான் இன்னும் பாக்கல… அந்த செய்தியை படித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஐயா (இளையராஜா) அழைத்ததால் அவரை பார்க்க வந்துவிட்டேன்… செய்தியை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்’ என இளையராஜாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் சீமான் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதிசயம் தான்கோகுல் ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எத்தனையோ அமைப்புகளும், ஊடகங்களும், கட்சிகளும் அணுகியிருந்தும் கூட அவையெல்லாவற்றையும் மீறி சம்மட்டி அடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளதென்பது அதிசயம் தான். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வந்த நிலையில் மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு வந்து தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதியற்ற அரசியல் கொள்கையை கொண்ட ஒருவர் இந்த குறிப்பிட்ட வழக்கை மட்டும் கடந்து செல்ல நினைப்பதென்பது ஆரோக்கியமானதல்ல என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.