மோட்டோரோலா, புதிய தலைமுறை மடிக்கக்கூடிய போன்களான மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மடிக்கக்கூடிய போன்களிலும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட், 12GB வரை ரேம், 144ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், 64MP பின்புற மற்றும் 32MP முன்பக்க கேமராக்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. அவற்றின் அம்சங்கள், விலை மற்றும் விவரக்குறிப்புகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா Razr 40 சீரிஸ் விலை
Motorola Razr 40 Ultra இரண்டு சேமிப்பகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலின் விலை 5699 யுவான். அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 67,000 ரூபாய். 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடல் 6399 யுவான் அதாவது சுமார் ரூ.75,000. நிறுவனம் அதன் Motorola Razr 40 மொபைலை 3 சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி விருப்பத்தின் விலை 3999 யுவான் அதாவது சுமார் 46,000 ரூபாய். போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு 4299 யுவான் அதாவது சுமார் ரூ.50,000 மற்றும் 12 ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் 4699 யுவான் அதாவது சுமார் ரூ.55,000.
Motorola Razr 40-ன் விவரக்குறிப்புகள்
Motorola Razr 40 மடிக்கக்கூடிய தொலைபேசி 6.9-இன்ச் HD + OLED பேனலைக் கொண்டுள்ளது. இதில் 2640 x 1080 பிக்சல் அடர்த்தி, 144Hz புதுப்பிப்பு வீதம், 413 PPI பிக்சல் அடர்த்தி, 10-Bit நிறம், HDR 10+ ஆதரவு ஆகியவை கிடைக்கின்றன. டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 7 நிறுவப்பட்டுள்ளது. Motorola Razr 40 இன் பின் பேனலில் 1.47-இன்ச் சிறிய கவர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 194 x 368 பிக்சல் அடர்த்தி கொண்ட OLED பேனல் ஆகும். Razr 40 மொபைலில், நிறுவனம் Snapdragon 7 Gen 1 சிப்செட்டை வழங்கியுள்ளது. இந்த மொபைல் Android 13-ல் இயங்குகிறது.
Motorola Razr 40 Ultra விவரக்குறிப்புகள்
மோட்டோரோலா Razr 40 ultra மடிக்கக்கூடிய ஃபோன் 6.9-இன்ச் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 2400 x 1080 பிக்சல் அடர்த்தி மற்றும் 165Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. அது போல் இதன் இரண்டாவது டிஸ்ப்ளே 3.6 இன்ச் ஆகும். இதுவும், 1066 x 1056 பிக்சல் அடர்த்தி 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலில் சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மெமரியைப் பொறுத்தவரை, இந்த போன் 12GB LPDDR5 RAM + 512GB சேமிப்பகத்துடன் வருகிறது.
LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை பின்புற கேமரா Razr 40 Ultra இல் இருக்கிறது. இதில் f/1.5 அப்பசர் கொண்ட 12MP முதன்மை லென்ஸ் மற்றும் f /2.2 அப்பசர் கொண்ட 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக f/2.4 அப்பசர் கொண்ட 32MP கேமரா லென்ஸ் உள்ளது. இந்த மோட்டோரோலா ஃபோனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3,800mAh பேட்டரி உள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Motorola Razr 40 Ultra மொபைல் Android 13 இல் இயங்குகிறது.