மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழகம் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலை நகர திமுக சார்பில் கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டுடன் கூடிய பீடம் அமைப்பதற்கு அமைத்து, அதில் கொடிக்கம்பம் நிறுவும் பணியை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.
இதில், காந்தி சவுக் பகுதியில் திமுக கொடி கம்பம் அமைப்பதற்காக கொடிக்கம்ப பீடம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரவு கொடிக்கம்ப பீடத்தை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்தில் ஒன்று சேர்ந்து, தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து கோஷமிட்டனர்.
தொடர்ந்து உடுமலை காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகள் புகார் அளிக்கவே, புகார் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.