ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது.
ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் 3டி பிளஸ் அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் பிரபாஸுக்கு எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்காது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சலார், ப்ராஜக்ட் கே ஆகிய படங்கள் வெளியாகவிருந்தாலும் கோலிவுட்டின் மாஸ் டைரக்டருக்கு தூண்டில் போட்டு வருகிறாராம்.
கோலிவுட் இயக்குநருக்கு தூண்டில் போடும் பிரபாஸ்: பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ். பாகுபலியின் வெற்றிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்தாலே அது பான் இந்தியா படம் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனாலும், சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் பிரபாஸின் மார்க்கெட்டையே காலி செய்துவிட்டன.
இந்நிலையில், வரும் 16ம் தேதி பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஓம்ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 3டி தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படமாக தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிபுருஷ் டீசர் வெளியான போது, இது குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது.
இன்னொரு பக்கம் ராமாயணத்தை அவமதித்துவிட்டதாக சில அமைப்புகள் ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அதேபோல், ராமாயணம் கதைக்களத்தில் சயிப் அலிகான் எப்படி நடிக்கலாம் எனவும் பிரச்சினை எழுந்தது. இதனால், ஆதிபுருஷ் படம் வெளியான பின்னர் அதன் ரிசல்ட் பிரபாஸுக்கு சாதகமாக இருக்காது என சொல்லப்படுகிறது. ஆனாலும் அடுத்து வெளியாகவுள்ள சலார் படத்தை மிகவும் நம்பியுள்ளார் பிரபாஸ்.
கேஜிஎஃப் மூலம் இந்திய சினிமாவையே மிரட்டிய பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கியுள்ளார். அதனால், இந்தப் படமும் கேஜிஎஃப் போல ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ப்ராஜக்ட் கே படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பிரபாஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரொம்ப ஆர்வம் காட்டி வருகிறாராம்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என மாஸ் காட்டிய லோகேஷ் அடுத்து விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இது கோலிவுட்டின் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், லோகேஷ் கனகராஜ்ஜை எப்படியாவது வளைத்துப் போட்டுவிட வேண்டும் என பிரபாஸ் ரெடியாகவிருக்கிறாராம். லியோவை முடித்துவிட்டு கைதி 2, தலைவர் 171 படங்களை இயக்கவுள்ள லோகேஷ் பிரபாஸுடன் இணைவது குறித்து இப்போதைக்கு எந்த பாசிட்டிவான பதிலும் சொல்லவில்லை என தெரிகிறது.