புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரயில் விபத்தில் சிக்கி 261 பர் பலியான சம்பவம் நிகழ்ந்த போது ரயில்கள் வேகமாக வந்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாலசோர் அருகே கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் போது அது தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அப்போது சில பெட்டிகள் வேறு தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சரக்கு ரயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளம் தடம்புரண்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. அது போல் பெட்டிகளில் நிறைய பேர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இரு பயணிகள் ரயில்களும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த கோரமான விபத்து நடந்தபோது பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் யஷ்வந்த்பூர் சூப்பர் பாஸ்ட்டும் வேகமாக சென்று கொண்டிருந்தன. இந்த சம்பவம் நேற்று 6.50 மணி முதல் 7.10 மணிக்குள் நடந்திருக்கும். காயமடைந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள் குறித்து தகவலறிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 4 தண்டவாளங்களில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலரது இதயம் வெளியே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது போல் நெஞ்சு கூடு உடைந்து ரத்தம் வெளியே வந்ததாகவும் தெரிகிறது. இந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் கூறும் தகவல்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.