தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் எப்போது தொடங்கும்?

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழைநாட்டிற்கு பெரும் மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கவுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் மழை, மழை மறைவு பிரதேசங்களுக்கும் நீர் ஆதாயத்தை கொடுக்கும் மழை, கடுமையான கோடைக் காலத்திற்கு பிறகு பொழியும் மழை என பல்வேறு சிறப்புகளை கொண்டது தென்மேற்கு பருவமழை.
​​எதிர்பார்ப்பு அதிகம்இதனால் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்தான். ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்க உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.
​​தமிழகத்தில் என்ட்ரி எப்போது?அதன்படி தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடாகாவில் நாளை தொடங்கினாலும் தமிழத்தில் தென்மேற்கு பருவ மழை என்ட்ரி கொடுக்க சில நாட்கள் ஆகும்.
​​மழை நிழல் பகுதிதமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வலதுப் பக்கத்தில் அமைந்துள்ளதால் தென்மேற்கு பருவக் காற்றின் மழை நிழல் பகுதியாக உள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் பெறுவது போன்ற பலத்த மழை தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. இருப்பினும் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகம் அதன் ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 35% மழையை இந்த தென்மேற்கு பருவமழையின் மூலம் பெற்று வருகிறது.
​​இந்திய வானிலை மையம்இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய காலை முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவமழை தெற்கு அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகள், குமரி முனை பகுதி மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் தொடங்கியிருப்பதை உறுதி செய்துள்ளது.
​​ஜூன் 10 ஆம் தேதிதென்மேற்கு பருவ மழை குறித்து பேசியுள்ள திருவனந்தபுரம் வானிலை மைய அதிகாரிகள், கேரளாவில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அதன்பிறகு பொதுவாக பருவக்காற்று தமிழகத்தை நோக்கி முன்னேற சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் பருவமழை ஜூன் 10 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
​​சற்று நிம்மதிபருவமழையின் வட எல்லை தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததும் பொதுவாக சென்னையை அடைய 2 முதல் 3 நாட்களும், முழு மாநிலத்தையும் கடக்க 4 முதல் 5 நாட்களும் ஆகும் எனவும் கூறப்படுகிறது. தற்போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னையின் பல பகுதிகள் நாள்தோறும் 110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்த அறிவிப்பு மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.