சென்னை இந்திய வரலாற்றில் மாபெரும் துக்கங்களில் ஒடிசா ரயில் விபத்து ஒன்று என கமலஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்துப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது டிவிட்டரில், “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே […]