பாலசோர் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தையடுத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் […]