இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக துவேஷ கருத்துகளை பரப்பிய கிறிஸ்துவ இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.
இங்கு, இஸ்லாம் மதத்துக்கு எதிராக துவேஷ பிரசாரம் மேற்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கு லாகூரில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ள பஹ்வல்பூர் பகுதியைச் சேர்ந்த நவுமன் மாசிஹ் என்ற கிறிஸ்துவ இளைஞர் நான்கு ஆண்டுகளுக்கு முன், ‘வாட்ஸாப்’ செயலி வாயிலாக இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்தார்.
இதையடுத்து, அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நவுமன் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, 20,000 ரூபாய் அபாராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement