கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 33 பா. தேவிமயில் குமார் துணையாய் வா கொத்து கொத்தான காய்கறி தோட்டம் காத்திருக்கிறது அவளின் கைகளில் நீர் அருந்திட, கோலி குண்டுடன் கூட விளையாடிய கூத்துப் பட்டறை கூட்டாளிகளின் கேலி கிண்டல்கள் காத்திருக்கின்றன… அடிக்க வேண்டாம் அரவத்தை, என கெஞ்சிய அந்த குரலை எண்ணிடும் கொல்லைப்புற பாம்பு, அவளைப் பார்க்க ஏங்குகிறது, அவள் வைத்த உணவை சாப்பிட்ட அத்தனை தெருநாயும் அவள் நினைவில், அப்பா சாப்பிடு என […]