ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகள் சிறப்பு ரயில் இன்று காலை 4.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 13 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தடைந்தனர் அவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று வரவேற்றார். அவர்களின் எட்டு பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்தில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தீவிர சிகிச்சை தவிர்க்கும் அளவிற்கு யாரும் இல்லை எனவும் குறிப்பாக தமிழகத்தை சார்ந்த யாரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.