டோக்கியோ, ஜப்பானில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த, 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், 2030ம் ஆண்டில் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிடும்’ என, அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடோ சமீபத்தில் தெரிவித்தார்.
குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான குழந்தை பிறப்பு விகிதம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, கடந்தாண்டில், குழந்தை பிறப்பு விகிதம், 1.2656ஆக இருந்தது.
இதற்கு முன், 2005ல் மிகவும் குறைவாக, 1.2601 விகிதம் இருந்தது. தொடர்ந்து, ஏழாவது ஆண்டாக, குழந்தை பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.
மக்கள்தொகை ஸ்திரத்தன்மைக்கு, குழந்தை பிறப்பு 2.07 சதவீதமாக இருக்க வேண்டும்.
ஒரு பெண், தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தையின் அளவே, குழந்தை பிறப்பு விகிதமாக கணக்கிடப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலின்போது, திருமணம் நடப்பது குறைந்தது, உயிரிழப்பு அதிகரித்தது ஆகியவையே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement