அசன்சியன்,
ரஷியாவில் கொலை, சட்ட விரோத ஆயுத கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் ஆண்ட்ரி ஆண்ட்ரீவ். இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் ரஷிய போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் பராகுவே நாட்டில் 2011-ம் ஆண்டு அவர் கைதானார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக அங்கு ஆண்ட்ரிக்கு தண்டனை வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துடன் இவரது தண்டனைக்காலம் முடிவடைந்தது. எனவே அவரை ரஷியாவிடம் ஒப்படைக்க பராகுவே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோல் 2021 முதல் தேடப்படும் பட்டியலில் உள்ள மொரோசோவ் என்பவரையும் ரஷியாவிடம் ஒப்படைக்க உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர் மீது 10-க்கும் மேற்பட்ட மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.