உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஸ்பினோஸரஸ் இன டைனோசர், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியவை.
சஹாரா பாலைவனத்தில் புதைபடிவ வடிவில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பினோஸரஸின் எலும்புக்கூடு இத்தாலியில் கட்டமைக்கப்பட்டு தற்போது அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிகாகோ நகர அருங்காட்சியகத்தில், 46 அடி நீள டைனோஸரின் எலும்புக்கூடு நீச்சலடிப்பது போல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.