இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Captain Miller Dhanush: நடிப்பு ராட்சசனான தனுஷ் மதுரைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்த விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
கேப்டன் மில்லர்அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்திற்காக தலைமுடி, தாடியை வளர்க்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் தலைமுடியும், தாடியும் நீளமாகிக் கொண்டே போகிறது. அண்மையில் மும்பை விமான நிலையத்தில் தனுஷை பார்த்தவர்கள் வியந்தார்கள். ஆள் மெலிந்து போய், நீளமான தலைமுடி, தாடியுடன் யாரோ மாதிரி இருந்தார்.
Dhanush: நீளமான தலைமுடி, ஓவர் தாடி, டக்குனு பார்த்தா யாருனே தெரியல: வைரலாகும் தனுஷ் போட்டோசரத்குமார்”Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!மதுரைகேப்டன் மில்லர் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படக்குழு மதுரையில் முகாமிட்டிருக்கிறது. தனுஷ் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் ஆவார். தினமும் காலை ஜாகிங் செல்வார். இந்நிலையில் மதுரையிலும் காலையில் எழுந்தவுடன் ஜாகிங் கிளம்பினார். தான் தெருவில் செல்வதை பார்த்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் யாருக்கும் தெரியக் கூடாது என்று அவர் ஒரு ஐடியா செய்தார்.
தனுஷ்தலையில் தொப்பி அணிந்து, மாஸ்க் போட்டுவிட்டால் தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என நினைத்தார் தனுஷ். அவர் என்ன தான் தொப்பி, மாஸ்குடன் சாலையில் ஜாகிங் சென்றாலும் மக்கள் தனுஷை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். தனுஷ் அருகில் வந்து அவரை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவர் ஜாகிங் சென்றபோது ஹாய் சொல்ல பதிலுக்கு அவரும் கையசைத்துவிட்டு சென்றார்.
வைரல்தனுஷ் மதுரை தெருக்களில் ஜாகிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது. தனுஷ் எந்த கெட்டப்பில் வந்தாலும் கண்டுபிடித்துவிடுவோம். மாஸ்க், தொப்பிலாம் ஜுஜுபி என்கிறார்கள் ரசிகர்கள். தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் என்ன தான் செய்கிறார். அந்த கேப்டன் மில்லரை உடனே பார்க்க வேண்டும் போன்று இருக்கிறதே என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தனுஷின் கெட்டப் தான் பலரின் ஆவலையும் தூண்டிவிட்டிருக்கிறது.Kamal Haasan: கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது, அதனால் தான்…: கமல்
வீடியோப்ரியங்கா1980களில் நடப்பது போன்று உள்ளது கேப்டன் மில்லர் கதை. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். அவர் தனுஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லருக்கு தனுஷுக்கு ராசியான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
டி50கேப்டன் மில்லரை அடுத்து தனது டி50 படத்தை இயக்கி, நடிக்கிறார் தனுஷ். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், விஷ்ணு விஷாலும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கிறார்கள். வித்தியாசமான கூட்டணி அமைத்திருக்கிறார் தனுஷ். டி50 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு தனுஷ் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Vidaa Muyarchi:லண்டனில் அஜித்: விடாமுயற்சி பற்றி 2 சூப்பர் அப்டேட் இருக்கு
படங்கள்தெலுங்கு இயக்குரநான சேகர் கம்முலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். மேலும் மாரி செல்வராஜ் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதுடன் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். மேலும் தனக்கு ராசியான வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். வடசென்னை 2 படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருக்கிறது.