கள்ளக்குறிச்சி : கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதிய சொகுசு பேருந்து.!
சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று இருபத்தொன்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் ஓட்டிவந்தார்.
இதையடுத்து இந்தப் பேருந்து கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஏரளாமானோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் சொகுசு பேருந்தை பொக்லின் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.