புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், இந்த பெரும் சோகத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மாதவராவ் சிந்தியா, நிதிஷ் குமார் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் தார்மீக அடிப்படையில் பதவி விலகினர். இந்த விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.