இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் ஷர்வானந்துக்கும், ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் இன்று நடந்திருக்கிறது.
“Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!
ஜெய்பூரில் இருக்கும் தி லீலா பேலஸில் நடந்த திருமணத்தில் நடிகர்கள் ராம் சரண், சித்தார்த், தயாரிப்பாளர் வம்சி, அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக நடந்த சங்கீத், ஹல்தி நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன. சங்கீத் நிகழ்ச்சியில் ராம் சரண் கலந்து கொண்டார்.
ஷர்வானந்தின் நெருங்கிய நண்பர் ராம் சரண் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த ஷர்வானந்தின் நிச்சயதார்த்தத்திற்கு தன் மனைவி உபாசனாவை அழைத்து வந்தார் ராம் சரண். உபாசனா தற்போது நிறைமாத கர்ப்பமாக இருப்பதால் திருமணத்திற்கு அழைத்து வரவில்லை.
ஷர்வானந்தின் மனைவி ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். ரக்ஷிதாவின் அப்பா மதுசூதன் ரெட்டி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் போஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி ரக்ஷிதாவின் தாத்தா ஆவார்.
கெரியரை பொறுத்தவரை ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் நடித்து வருகிறார் ஷர்வானந்த். இது அவரின் 35வது படமாகும். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹைதராபாத் திரும்பினார் ஷர்வானந்த்.
இதற்கிடையே ஷர்வானந்துக்கும், ரக்ஷிதா ரெட்டிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். திருமணம் நின்றுவிட்டது என தகவல் வெளியானது. விசாரித்துப் பார்த்தபோது அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. ஷர்வானந்த் ஊர் திரும்பிய பிறகே தேதி குறித்து திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.
லண்டனில் இருந்து ஹைதராபாத் வந்த ஷர்வானந்த், திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். தனது சொகுசு காரில் ஹைதராபாத்தில் சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்ப அது டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Sharwanand: நான்கு நாளில் திருமணம்: விபத்தில் சிக்கிய நடிகர் ஷர்வானந்த்
இந்த விபத்தில் ஷர்வானந்த் காயம் அடைந்ததாகவும், காரில் இருந்து காயங்களுடன் வெளியே வந்த அவரை அங்கிருந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஷர்வானந்துக்கு காயமும் ஏற்படவில்லை, அவரை மருத்துவமனையிலும் அனுமதிக்கவில்லை என அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
திருமணத்திற்கு முன்பு ஷர்வானந்த் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களை கவலை அடைய செய்தது. ஜெய்பூருக்கு கிளம்பும் முன்பு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுங்கள் என்றார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் ஷர்வானந்த், ரக்ஷதா ரெட்டியின் திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி நல்லபடியாக நடந்திருக்கிறது.
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகரானார் ஷர்வானந்த். இந்நிலையில் அவரின் திருமண புகைப்படங்களை பார்த்த தமிழ் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ் படங்களில் அடிக்கடி நடிக்குமாறு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.