புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உறுதி செய்யப்படாத ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து குறித்து இரு ரயில்வே அதிகாரிகள் பேசிக் கொள்ளும் ஆடியோ ஒன்றை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷ் வெளியிட்டிருக்கிறார். அதில் பேசும் அதிகாரிகளில் ஒருவர் தென்கிழக்கு ரயில்வேயின் துணை சிஎஸ்ஓ (போக்குவரத்து) அசோக் அகர்வால் என்று தன்னை குறிப்பிடுக்கிறார். மற்றொவர் யார் என்ற தகவல் அந்த ஆடியோவில் இல்லை.
ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் பேசும் ஆடியோவில் இடம்பெற்றிருப்பதாவது:
அதிகாரி: அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன.. இறுதியாக என்னதான் கூறினார்கள்
அசோக் அகர்வால்: விபத்து நடந்த பகுதியில் முக்கிய பாதைக்கு சிக்னல் வழங்கப்பட்டது. ஆனால் வண்டி லூப் லைனில் சென்றது..
அதிகாரி: இது எப்படி சாத்தியமாகும்..
அசோக் அகர்வால்: சூழ்ச்சி இருந்தால் இது சாத்தியம்..
அதிகாரி: சிக்னல் வழங்கப்பட்ட அந்த நேரத்தில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தார்களா?
அசோக் அகர்வால் : ஆமாம், சில வேலைகள் நடந்து கொண்டிருந்தன.. சில குழப்பங்களும் நடந்து இருக்கலாம்… சிக்னல் மெயின் லைனுக்கு இருந்தது, ஆனால் ரயில் எதிர்கொள்ளும் புள்ளி லூப் லைனுக்காக இருந்தது.
அதிகாரி: அதனால்தான் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலில் மோதியதா?
அசோக் அகர்வால்: .. ஆமாம் சார், இதனால்தான் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலில் மோதியது, பின்னர் அனைத்து பெட்டிகளும் சிதறின.. அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।
রেলের দুই কর্তার কথোপকথন। অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টা তদন্তসাপেক্ষ।
বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। pic.twitter.com/ovc5UxBlm3— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 3, 2023
ரயில் விபத்து:
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். 1000 பேர் காயமடைந்துள்ளனர்.