ஒடிசா ரெயில் விபத்தால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் குறித்து திமுக தலைமை மறு தேதி அறிவிப்பை வெளியிலிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், உள்ள பாலசோர் மாவட்டம், பஹானாகா ரெயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி கொடூர விபத்து நிகழ்ந்தது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், நின்று கொண்டிருந்த சரட்டைக்கு ரயில் மோதி முதல் விபத்து நிகழ்ந்தது.
அடுத்த சில நிமிடங்களில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், விபத்துக்குள்ளான ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மூன்று ரெயில்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளானதில் 275 பயணிகள் பலியாகினர். 700 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.