ஒடிசாவில் விபத்திற்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுநருக்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசாவில் நேற்று முன் தினம் நிகழ்ந்த ரயில் விபத்தில் கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மோஹன்டிக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உதவி ஓட்டுநர் ஹஜாரி பெஹராவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
விபத்து நடந்தபோது, சரக்கு ரயிலின் உதவியாளர் தேநீர் அருந்த இறங்கி சென்றிருந்தால் அவர் விபத்தில் இருந்து தப்பியுள்ளார். அதேபோல், கோரமண்டல் ரயில் மீது மோதிய நிலையிலும் யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலின் ஓட்டுநர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.