இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Rajini in Puducherry: புதுச்சேரிக்கு சென்ற இடத்தில் ரஜினிகாந்துக்கு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.
லால் சலாம்Rajinikanth: மும்பையில் சத்தமில்லாமல் சம்பவம் செய்த ரஜினி: தெரிந்தால் ஆடிப் போயிடுவீங்க ஆடிஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முன்னதாக மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கு ரஜினியை வைத்து சண்டை காட்சியை படமாக்கினார் ஐஸ்வர்யா. லால் சலாமில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவும் நடிக்கிறார். மும்பை படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார்.சரத்குமார்”Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!புதுச்சேரிலால் சலாம் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வந்தார் ரஜினிகாந்த். தலைவர் வந்திருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் அவரை காண லால் சலாம் ஷூட்டிங்ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்கள். ரசிகர்களை பார்த்த ரஜினி கார் கண்ணாடியை மட்டும் லேசாக இறக்கிவிட்டு, சிரித்தபடி சென்றுவிட விரும்பவில்லை.
ரஜினிதனக்காக இத்தனை பேர் கூடியிருந்ததை பார்த்த ரஜினி காரின் இருக்கையில் ஏறி நின்று ரூஃப் வழியாக ரசிகர்களை பார்த்து ஸ்மைல் செய்து, கையசைத்தபடியே சென்றார். ரஜினி தங்களுக்காக செய்த காரியத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
வீடியோமும்பைரஜினி முன்னதாக மும்பைக்கு சென்றபோது தான் மொய்தீன் பாயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதை பார்த்து ரஜினி ரசிகர்களே அதிருப்தி அடைந்தார்கள். பின்னர் தான் மொய்தீன் பாய் கெட்டப்பில் கபில் தேவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ரஜினி. அந்த புகைப்படத்தை பார்த்த பிறகே மொய்தீன் பாய்னா கெத்து தான் என ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
ஐஸ்வர்யாRajinikanth: மிரள வைத்த ரஜினி: ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் தலைவர் ரசிகர்கள்மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக பிரேக் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 7 ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ,ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ரஜினி கவுரவத் தோற்றத்தில் தான் வருகிறார். லால் சலாமுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
தலைவர் 170லால் சலாமை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவர் 170 படத்தில் போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த்.
அண்ணன்Rajinikanth: ரஜினி வீட்டில் இருந்து நடிக்க வரும் நபர்: இவர் சத்தியமா யார் லிஸ்ட்லயுமே இல்லயேதலைவர் 170 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி.
இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் நடிகராகியிருக்கிறார். 80 வயதாகும் சத்யநாராயண ராவ் நடிக்கும் படத்தின் பூஜை ரஜினியின் பெற்றோரின் நினைவிடத்தில் நடந்தது. ரஜினியின் அண்ணன் நடிக்க வந்ததில் தலைவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அண்மையில் தான் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து ரஜினி, தமன்னா உள்ளிட்ட படக்குழு பெரிய கேக் வெட்டியது. அதை பார்த்த ரசிகர்களோ, எவ்ளோ பெரிய கேக்கு என வியந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush: யாருக்குமே தெரியக் கூடாதுனு நினைத்த தனுஷ்: வீடியோவே வந்துடுச்சு