சிச்சுவான் சீன நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் 14 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சீன அரசுக்குச் சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இங்கு 14 பேர் சடலமாக […]