வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரயில் விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க உள்ளதாக தொழில் அதிபர் அதானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர் வீரேந்திர ஷேவாக் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் கவலை கொண்டுள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கல்வியை அதானி குழுமம் கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு ஆகும்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுக்கு சிறந்தநாளை கொடுங்கள் என பதிவிட்டு உள்ளார்.
இதே போல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், ஒடிசா ரயில் விபத்தில் பலியான பெற்றோர்களின் குழந்தைகள் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. அவர்களுக்கு ேஷவாக் இன்டர்னேஷனல் பள்ளியில் உறைவிட வசதியுடன் இலவச கல்வியை வழங்க உள்ளேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement