காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செநாச்சிபட்டைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் புறப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சித்தேரி மேட்டில் பழுதாகி சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ராமஜெயம் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.