சென்னை: இயக்குநர் பாலசந்தரின் 101வது படமான பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விமலா ராமன் கவர்ச்சி கன்னியாக தனது 41வது வயதிலும் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள வினய்யை காதலித்து வரும் விமலாராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிராண்ட்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய நடிகையாக நடித்து வரும் விமலா ராமனின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.
ராமன் தேடிய சீதை: பொய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விமலா ராமனுக்கு ஒடியாவில் பாஸிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான சுரேஷ் கோபியின் டைம் படம் அவருக்கு அங்கு நல்ல நேரத்தைக் கொடுக்க சுமார் ஒரு டஜன் மலையாள படங்களில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.
மீண்டும் அவரை இயக்குநர் சேரன் தான் நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக கவனம் செலுத்தத் தொடங்கினார் விமலா ராமன்.
வினய்யின் காதலி: உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், இந்த வாரம் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் வீரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில், அவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார் விமலா ராமன்.
இருவரும் ஒன்றாக வெளிநாடுகளில் நெருக்கமாக ஊர் சுற்றி வரும் பல போட்டோக்களை அவர்களே இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். ஆனால், எப்போ திருமணம் என்பதை மட்டும் இருவரும் இன்னமும் சொல்லவில்லை.
41 வயதிலும் தாராள கவர்ச்சி: இந்நிலையில், நடிகை விமலா ராமன் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ருதிஹாசன் ரேஞ்சுக்கு கருப்பு நிற கவர்ச்சி உடையை கலக்கலாக அணிந்து கொண்டு வேறலெவல் போட்டோஷூட்டை நடத்தி உள்ளார்.
ஓவர் கோட்டை திறந்து விட்டு உள்ளாடை தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள விமலா ராமனின் ஹாட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர். நடிகர் வினய் ரொம்பவே கொடுத்து வைத்தவர் என்கிற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் அஸ்வின்ஸ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ருத்ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விமலா ராமன்.