இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Vidaa Muyarchi update: விடாமுயற்சி படம் குறித்து அப்டேட் எதிர்பார்த்த அஜித் குமார் ரசிகர்களுக்கு 3 அப்டேட் கிடைத்திருக்கிறது.
விடாமுயற்சிமகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா நடிப்பது உறுதியாகிவிட்டது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்றார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் தேதி தள்ளிப் போயிருக்கிறது.சரத்குமார்”Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!படப்பிடிப்புவிடாமுயற்சியின் படப்பிடிப்பு மே 22ம் தேதி துவங்கும் என முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு ஜூன் முதல் வாரம் என்றார்கள். இந்நிலையில் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் தான் படப்பிடிப்பை துவங்கப் போகிறாராம் மகிழ்திருமேனி. படத்தை 2024ம் ஆண்டு கோடையின் போது ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பை துவங்குவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார் மகிழ்திருமேனி.
லண்டன்விடாமுயற்சி படம் தொடர்பாக லண்டனுக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் அஜித் குமார். சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கப் போகிறாராம் மகிழ்திருமேனி. படத்திற்காக அஜித் லண்டனில் இருப்பது, த்ரிஷா ஹீரோயினாக நடிப்பது உறுதியானது நல்ல தகவல் ஆகும். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போயிருப்பது ரசிகர்களுக்கு நல்ல தகவல் இல்லை.
டூர்விடாமுயற்சி வேலையை முடித்துக் கொண்டு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலக டூர் கிளம்பவிருக்கிறார் அஜித். நவம்பர் மாதம் கிளம்ப அவர் திட்டமிட்டுள்ளார். அதனால் அக்டோபர் மாதத்திற்குள் பட வேலையை முடிக்க முடிவு செய்திருக்கிறார் மகிழ்திருமேனி. தன் உலக டூருக்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைத்திருக்கிறார் அஜித் குமார்.
அஜித்தை இம்பிரஸ் செய்த விடாமுயற்சி இயக்குநர் மகிழ்திருமேனி..எனக்கு அவ்ளோலாம் தேவையில்ல..
விக்னேஷ் சிவன்அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. அந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது லைகா நிறுவனம். ஆனால் படப்பிடிப்பு துவங்க வேண்டிய ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதன் பிறேக மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள்.
ரசிகர்கள்இயக்குநர் மாறியதால் தான் இந்த தீபாவளிக்கு அஜித் படம் ரிலீஸாக முடியாமல் போய்விட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பை தான் அக்டோபர் மாதமே முடிக்கப் போகிறாரே மகிழ்திருமேனி. அந்த படத்தை பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யலாமே. கோடை வரை என்ன செய்யப் போகிறாராம் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Kamal Haasan: கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது, அதனால் தான்…: கமல்
நேபாளம்விடாமுயற்சி வேலையை துவங்குவதற்கு முன்பு நேபாளம், சிக்கிமுக்கு தன் பைக்கில் டூர் சென்று வந்தார் அஜித். நேபாளத்தில் ஹோட்டல் ஒன்றில் அஜித் சமையல் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. சென்னை திரும்பிய பிறகு வயநாட்டுக்கு கிளம்பிச் சென்றார். இந்தியா முழுவதும் தன் பைக்கில் சுற்றி வந்துவிட்டார் அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.கே. மோட்டோரைடுதன்னை போன்று பைக்கில் டூர் போக விரும்புபவர்களுக்காக ஏ.கே. மோட்டோ ரைடு என்கிற நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் அஜித். பைக் பிரியர்களுக்கு அஜித் நிறுவனம் பேருதவியாக இருக்கும். அந்த நிறுவனம் மூலம் அஜித்துடன் சேர்ந்து பைக்கில் டூர் செல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். தங்களின் விருப்பத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
Ajith: பைக்கில் உலகம் சுற்றணுமா?: கவலைய விடுங்க, நம்ம அஜித்தின் AKMotoRide இருக்கே