திருப்பதி செல்ல சூப்பர் ரூட்… 20 நிமிஷம் இன்னும் சீக்கிரமா… திருத்தணி பைபாஸில் மெகா பிளான்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் உள்ள ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருப்பதி செல்ல 133 கிலோமீட்டர் தூரம் மட்டுமே என்பதால் வார இறுதியில் தங்கள் சொந்த வாகனங்களில் பலரும் புறப்பட்டு செல்வதை பார்க்க முடிகிறது.

​தேசிய நெடுஞ்சாலை 205திருப்பதி வரை சென்று விட்டால் அதன்பிறகு திருமலைக்கு மலை மீது பயணிக்க வேண்டும். முன்னதாக சென்னையில் இருந்து செல்லும் போது சித்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 205ல் தான் திருப்பதி செல்ல முடியும். இந்த வழித்தடத்தில் கோயில் நகரமாக கருதப்படும் திருத்தணியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பக்தர்கள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
​தடா சாலை வழி பயணம்மேலும் தடா சாலை வழியே திருப்பி விடப்படுவதால் கால தாமதம் ஆவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் சட்ராஸ் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் – திருத்தணி (SCKAT) பைபாஸ் சாலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் மட்டும் நிறைவு பெற்றால் சென்னையில் இருந்து திருப்பதி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விரைவாக சென்றுவிட முடியும்.
​திருத்தணி பைபாஸ் சாலைதிருத்தணி அருகே 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய பாதையில் விறுவிறுப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சிறப்பு சாலைக்கான பணிகள் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், கொரோனா பெருந்தொற்று போன்ற காரணங்களால் கால தாமதம் ஆனது. அதன்பிறகு இயல்பு நிலை திரும்பி பணிகள் வேகமெடுத்துள்ளன.
மேம்பாலப் பணிகள்தற்போது 94 சதவீத அளவிற்கு நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்தணி நகருக்கு 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர திருத்தணி மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே நந்தி ஆற்றின் மீது 100 மீட்டர் நீள பாலமும், ரயில் வழித்தட மேம்பாலமும் கட்டும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
நிதி ஒதுக்கிய தமிழக அரசு
இதில் ரயில் மேம்பாலத்திற்கு போதிய நிதி கிடைக்காத காரணத்தால் நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து நிதியுதவியை தெற்கு ரயில்வே கேட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்து தமிழக அரசு 5.9 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது.
இன்னும் ஓராண்டில்இதனால் பணிகள் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒட்டுமொத்த பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. எனவே திருத்தணி பைபாஸ் சாலை திட்டம் முடிவடைவதை சென்னைவாசிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.