இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த பிகில் படம் மூலம் நடிகையானார். பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த பாண்டியம்மாவை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
“இந்த படம் பண்ணலாமானு யோசிச்சேன்” நடிகை Nikhila Vimal!
பிகிலை அடுத்து கார்த்தியின் விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்தார் இந்திரஜா. இது தவிர்த்து Paagal தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்திரஜா இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். அவர் தன் முறைமாமனான டாக்டர் கார்த்திக்குடன் சேர்ந்து சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரீல்ஸ் ரசிகர்களுக்கு அந்த ஜோடி ரொம்ப பிடித்துவிட்டது.
View this post on InstagramA post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)
இந்நிலையில் தன் மாமா கார்த்திக் மற்றும் குடும்பத்தாருடன் குலசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இந்திரஜா கூறியிருப்பதாவது,
View this post on InstagramA post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)
என் குலசாமி மானுத்து பெத்தன சாமி கோவில் பெரும் கும்ப்பிடு திருவிழா… 40 வருடங்களுக்கு பிறகு சிறப்பாக நடைப்பெற்றது என்றார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, டாக்டர் கார்த்திக் நீங்கள் இந்திரஜாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?. நீங்கள் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வெளியிடுகிறார்கள். அடிக்கடி ஜோடியாக புகைப்படம் வெளியிடுகிறீர்கள். ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்கிறது.
Rajinikanth: இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லப்பா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்
உங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து தானே திருமணமா என்று கேட்கிறோம் இந்திரஜா. ஆமாம், இல்லை என்று ஏதாவது சொல்லுங்கள் ப்ளீஸ் என்று தெரிவித்தார்கள்.
திருமண கமெண்ட்டுகளை பார்த்த இந்திரஜா கூறியிருப்பதாவது,
இன்னும் தேதி குறிக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். என்னோட ஹேப்பினஸை கண்டிப்பா என்னோட ஃபேன்ஸ் மற்றும் நலம்விரும்பிகள் கிட்ட ஷேர் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.
முறை மாமன் உங்களை இப்பவே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். திருமணம் நடந்தால் நிச்சயம் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமுமே இல்லை இந்திரஜா. நீங்கள் உங்கள் முறை மாமனுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். திருமணத்திற்கு மறக்காமல் அழையுங்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தன் குடும்பத்துடன் சந்தித்தார் இந்திரஜா. அப்பொழுது தானும், கார்த்திக்கும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பின் செய்து வைத்திருக்கிறார்.
ரீல்ஸ், புகைப்படங்களை பார்த்து ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டார் இந்திரஜா. திருமணமானாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். குறிப்பாக மாமாவுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட வேண்டும். உங்கள் இருவரின் ரீல்ஸுக்கு நாங்கள் எல்லாம் ரசிகர்களாகிவிட்டோம். அது இல்லாமல் இருக்க முடியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோ சங்கர் உடல் மெலிந்து அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்திரஜா வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களில் ரோபோ சங்கர் கொஞ்சம் வெயிட் போட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் பழைய ரோபோ சங்கராக திரும்பி வருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.