மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். விபத்தினால் பலத்த காயம் அடைந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கார் விபத்தில் சிக்கியதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் சீசன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த தொடரிலும் இவரது பெயர் இடம் பெறவில்லை.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த பண்ட் கார் விபத்தில் சிக்கியதின் விளைவாக இந்திய அணி தற்போது வரை அவருக்கு மாற்றாக சிறந்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் ஈடுபட்டு வருகிறது. அவரது இடத்துக்கு கே.எல்.ராகுல், இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், கே.எஸ்.பரத் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் ரிஷப் பண்ட் எப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ரிஷப் பண்ட் தற்போது அவரது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஒன்றை போட்டுள்ளார். அதை பார்க்கும் போது அவர் சீக்கிரமாகவே கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் அவர் அப்லோட் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.