இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரியான நாலக களுவவ இன்று (05) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக சேவையில் 23 வருட அனுபவமுள்ள இவர், இதற்கு முன்னர் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாகவும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஆவார். அவுஸ்திரேலியாவின் கென்பரா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டதாரியான இவர், 2000 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்தார்.
இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவும் கலந்து கொண்டார்.