மொகதிசு,
சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர். முன்னதாக அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு தீவிரமாக நம்பி இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து உகாண்டா ராணுவத்தினர் அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுக்கு உதவிகள் வருவது குறிப்பிடத்தக்கது.