WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மல்லுக்கட்ட இருக்கின்றன. ஜூன் 7 முதல் 11 வரை கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் ஓவல் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில், டீம் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தனது பெயரில் ஒரு பெரிய சாதனை படைக்க இருக்கிறார். டான் பிராட்மேனின் பெரிய சாதனையை முறியடிக்கும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உள்ளது.

சாதனையை நோக்கி விராட் கோலி

கிரிக்கெட் உலகின் மகத்தான வீரராக பார்க்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு உள்ளது. அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலேயே அவரால் நிகழ்த்த முடியும். WTC இறுதிப் போட்டியில் விராட் கோலி 84 ரன்கள் எடுத்தால், ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற அடிப்படையில் பிராட்மேனைத் தாண்டிச் செல்வார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி மூன்று வடிவங்களிலும் 92 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4945 ரன்கள் எடுத்துள்ளார். ​​16 சதங்கள் மற்றும் 24 அரை சதங்களும் அடங்கும். அந்தவகையில், ஓர் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் 5028 ரன்கள் எடுத்துள்ளார். இதனை முறியடிக்கும் வாய்ப்பு கோலிக்கு உள்ளது. 

சச்சினின் சாதனையை சமன் செய்வார்

இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை விராட் கோலி சமன் செய்ய முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 5000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். முதலில் டான் பிராட்மேன் மற்றும் இரண்டாவது சச்சின் டெண்டுல்கர். இருப்பினும், சச்சின் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 55 ரன்கள் எடுத்தால், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் சாதனை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் இதுவரை 108 போட்டிகளில் விளையாடி 49 சராசரியுடன் 8416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ​​28 சதங்கள் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.