Trisha:பிரபல நடிகரின் இரட்டை பிள்ளைகளை வாழ்த்திய த்ரிஷா: அந்த செல்லம் தான் லியோ விஜய்யின் மகளா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Thalapathy Vijay: இன்ஸ்டாகிராமில் த்ரிஷா வாழ்த்திய செல்லங்களை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.

​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனனின் இரட்டை பிள்ளைகளான இளன், இயலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவர்களை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் த்ரிஷா. அந்த போஸ்ட்டால் புது கேள்வி எழுந்துள்ளது.நிகிலா​”இந்த படம் பண்ணலாமானு யோசிச்சேன்” நடிகை Nikhila Vimal!​​இயல்​முன்னதாக நடந்த லியோ படத்தின் பூஜையில் இயல் கலந்து கொண்டார். தளபதி விஜய், த்ரிஷாவுக்கு இடையே கையில் பூங்கொத்துடன் நின்று போஸ் கொடுத்தார். அவர் லியோவில் நடிக்கிறார் என்பது அந்த புகைப்படம் மூலம் தெரிந்தது. இந்நிலையில் த்ரிஷா வாழ்த்தியதன் மூலம் இயல் தான் லியோவில் விஜய்யின் மகளாக நடிக்கிறார் போன்று என ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.

​த்ரிஷா​லியோவில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த தம்பதியின் மகளாக இயல் நடிக்கிறார் போன்று என்கிறார்கள் ரசிகர்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் கணித்துக்கொள்ளுங்கள், நான் எதையும் உறுதி செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படம் பற்றி யாரும் வாய் திறக்கக் கூடாது என்று கூறி வைத்திருக்கிறார் லோகேஷ். ஆனால் அந்த படத்தில் நடித்து வருபவர்கள் சந்தோஷத்தில் உளறிவிடுகிறார்கள்.
​வியாபாரம்​லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி போஸ்டர் அல்லது Glimpse வெளியிட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையே லியோ படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 60 கோடிக்கு போயிருக்கிறது. விஜய்யின் கோட்டையான கேரளா உரிமம் மட்டும் ரூ. 16 கோடிக்கு சென்றிருக்கிறது. கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படத்தின் உரிமம் லியோவுடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

​சாதனை​Rajinikanth: நண்பன் உயிருடன் இல்லை: அம்பரீஷ் மகன் திருமணத்தில் முதல் ஆளாக பங்கேற்ற ரஜினிஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தின் உரிமம் தான் கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படமாக இருந்தது. இந்நிலையில் ரஜினி பட சாதனையை முறியடித்துள்ளது லியோ. ரிலீஸுக்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்திருக்கிறது லியோ. ரிலீஸான பிறகு பாக்ஸ் ஆபீஸில் கில்லி மாதிரி சொல்லி அடிக்கப் போகிறது லியோ என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

​ஷூட்டிங்​தற்போது சென்னயைில் விஜய் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ஹைதராபாத் சென்று அங்கிருக்கும் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய செட்டில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கவிருக்கிறார். அத்துடன் லியோ படப்பிடிப்பு முடிந்துவிடும்.

​Indraja Sankar: பிகில் படம் புகழ் இந்திரஜா சங்கருக்கு திருமணம்: மாப்பிள்ளை வேறு யாருமில்ல…

​தளபதி 68​லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவது 10 மாதங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.