நெஞ்சே நடுநடுங்குதே.. தாலிபன்களின் \"விஷ முகம்\".. மொத்தம் 80 பெண்கள்.. இதுகூட பொறுக்கலியே.. ஐயோ கொடுமை

காபூல்: 80 பள்ளி சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்.. இதைக் கேள்விப்பட்டு, உலக நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட பெண் குழந்தைகள், அங்கே 2 வருடங்களுக்கு மேலாகவே ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.

ஆப்கன் பெண்கள்: அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை.

ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூஙகா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு..

கல்வி உரிமை: பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.. அங்குள்ள பொம்மைகள் அனைத்தும் முகத்தை மறைத்தே காட்சியளித்து கொண்டிருக்கின்றன…

புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போகக்கூடாது இப்படியான உத்தரவுகளும் தொடர்கின்றன.. அவ்வளவு ஏன்?

கிளம்பிய புகார்கள்: பார்க்குக்கு போகக்கூடாது.. தோட்டங்களுக்கு போகக்கூடாது.. புல்வெளிகள் அமைந்துள்ள ஓட்டல்களுக்கு பெண்கள் போகக்கூடாது என்று பல தடைகள் தொடர்கின்றன. காரணம், இதுபோன்ற பசுமையான இடங்களை கொண்ட ஓட்டல்களில், ஆண்களும், பெண்களும் ஒன்றுசேர்கிறார்களாம்.. இப்படி ஒரு புகார் கிளம்பியதால்தான், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரணமும் சொல்கிறார்கள்.

அதைவிட கொடுமை, உலகமே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தால், அன்றைய தினம், அந்த நாட்டின் 2 மாவட்டங்களில் மட்டும் ஈத் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துவிட்டனர்.. இப்படி நாளுக்கு நாள் அட்டகாசங்கள் பெருகி வரும் சூழலில்தான், இப்போது ஒரு பகீர் சம்பவம் நடந்து உலக நாடுகளையே உறைய வைத்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.. சங்சரக் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகள் 2 செயல்பட்டு வருகின்றன.. இந்த 2 பள்ளிகளிலுமே, நிறைய பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.. இதில் பெண் குழந்தைகளும் அடக்கம்..

கொடூரம்: அதனால், இந்த 2 பள்ளிகளை சேர்ந்த 80 சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை, அம்மாகாண கல்வித்துறை பணிப்பாளர் மொஹமட் ரஹ்மானி கூறியதாக, ஃபாக்ஸ் செய்தி நிறுவனமானது, செய்தி வெளியிட்டுள்ளது.

விஷம் குடித்த சிறுமிகளில் 60 மாணவிகள், நஸ்வான்-இ-காபாத் அப் பள்ளியில் படிப்பவர்களாவர்.. மீதி 17 பெண்கள் நஸ்வான்-இ-ஃபைசாபாத் பள்ளியை சேர்ந்தவர்கள்… இவை இரண்டுமே ஆரம்ப பள்ளிகள் ஆகும்.. ஒரே ஏரியாவில், பக்கத்து பக்கத்திலேயே அமைந்திருக்கின்றன..

படித்ததற்கு தண்டனையா?: சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளனர்.. இது தெரியாமல் குழந்தைகள் மதிய உணவு இடைவேளையில் சாப்பாடு சாப்பிட்டுள்ளனர்.. இதனால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு, அடுத்தடுத்து மயக்கம் அடைந்து விழுந்துள்ளனர்.. இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம், அனைவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது.. டாக்டர்கள் பரிசோதனை செய்தபோதுதான், சிறுமிகள் உணவில் விஷம் கலந்தது தெரியவந்துள்ளது.. இப்போது தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..

அதிர்ச்சி: மாணவிகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.. ஆனாலும்,படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 80 குழந்தைகளுக்கும் இவ்வளவு பெரிய தண்டனையா? என்று உலக நாடுகள் அதிர்ந்து போய் கேட்டு வருகின்றன..!!

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.