சென்னை: Trisha (த்ரிஷா) த்ரிஷாவின் கைவசம் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே த்ரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை த்ரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக த்ரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் த்ரிஷா.
லியோவில் த்ரிஷா: ஒரு ஹீரோயினின் பீக் காலம் 10 வருடங்கள்தான் என பலரும் கணித்த நிலையில் அந்த கணிப்புகளை உடைத்த கதாநாயகியும் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக் அவர் பீக்கில் இருந்துவருகிறார். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக குருவி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் த்ரிஷா: தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். அதை படமாக்குவதற்கு எம்ஜிஆரிலிருந்து, கமல் ஹாசன்வரை முயன்றார்கள். ஆனால், அவர்களது முயற்சி கைகூடவில்லை. அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியானது. இதிலும் த்ரிஷா குந்தவையாக நடித்திருக்கிறார். நாவலில் குந்தவை கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமான ஒன்று குறிப்பிடத்தக்கது.
குந்தவை த்ரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு த்ரிஷா தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.
மீண்டும் ஒரு ரவுண்டு: பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்கு பிறகு த்ரிஷா மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், தனுஷின் 50ஆவது படம், கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் கமல் 234ஆவது படம், மேலும் ஒரு வெப் சீரிஸ், மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் 5 பட வாய்ப்புகளை கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவை தவிர விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் த்ரிஷா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், திருமணம் செய்துகொண்டால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்றுதான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது, இப்போது இத்தனை படங்கள் கைவசம் வைத்திருப்பதை பார்த்தால் எப்போதுமே திருமணம் செய்துகொள்ளமாட்டார்போல என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.