இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Lal Salaam: லால் சலாம் படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் அப்பாவை பற்றி உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார்.
லால் சலாம்தன் காதல் கணவர் தனுஷின் 3 படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகன்கள் யாத்ரா, லிங்கா வளரட்டும் என கெரியரில் இருந்து பிரேக் எடுத்தார். இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்குகிறார். ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.சரத்குமார்”Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!ஐஸ்வர்யாதன் அப்பா புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, உங்களை பார்த்து வளர்ந்தேன்… ஆனால் ஒரு நாள் உங்களை வைத்து படம் இயக்குவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பா…. உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டா போஸ்ட்View this post on InstagramA post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)ரசிகர்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது, லால் சலாம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். தலைவரை மொய்தீன் பாயாக பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம். தரமான சம்பவம் இருக்கு போன்று. உங்கள் போஸ்ட்டை பார்த்து ஃபீல் செய்துவிட்டோம். தலைவருக்கு மகளாக பிறக்க கொடுத்து வைத்திருக்கிறீர்கள். தலைவர் நன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தனுஷ்ஐஸ்வர்யாவின் போஸ்ட்டை பார்த்த தனுஷ் ரசிகர்களோ, அண்ணி எப்பொழுது மீண்டும் அண்ணனுடன் சேர்ந்து வாழப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லவ்ஸ் தனுஷ் என கூறியுள்ளனர். தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருவரும் அவரவர் வேலையில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush: யாருக்குமே தெரியக் கூடாதுனு நினைத்த தனுஷ்: வீடியோவே வந்துடுச்சு
புதுச்சேரிRajinikanth: ரஜினியால் அல்லோகல்லப்பட்ட புதுச்சேரி: தலைவர்னா சும்மாவாரஜினிகாந்த் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருப்பது அறிந்த ரசிகர்கள் ஷூட்டிங்ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்காக காரின் ரூஃப் வழியாக நின்று கையசைத்தார் ரஜினி. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
கபில் தேவ்லைகா நிறுவனம் தயாரித்து வரும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். முன்னதாக மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கபில். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கபில் தேவ் மற்றும் ரஜினியை சேர்த்து வைத்து படம் எடுப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என தெரிவித்தார் ஐஸ்வர்யா.
ஜீவிதாலால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஐஸ்வர்யாவின் கம்பேக் படமான இதில் ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். பல காலம் கழித்து அவர் தமிழ் படத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினியுடன் சேர்ந்து ஜீவிதா நடிப்பது இதுவே முதல் முறையாகும். ரஜினிக்கு கவுரவத் தோற்றம் தான் என்றாலும் சுமார் ஒரு மணிநேரம் அவரை படத்தில் பார்க்கலாமாம். இரண்டு சண்டை காட்சிகளில் வேறு மாஸ் கட்டுகிறாராம் ரஜினி.