சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்தத் தொடரில் இரண்டு திருமணங்களை செய்துவிட்டு கோபி படும் பாடு, ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு இது தேவைதான் என்று ரசிகர்களை யோசிக்க செய்துள்ளது.
இந்தத் தொடர் சேனலில் டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக ஒருபக்கம் தகவல்கள் வெளியானாலும் அதற்கான முகாந்திரமே தொடரில் காணப்படவில்லை.
அதிகமாக முட்டிக் கெள்ளும் ஈஸ்வரி -ராதிகா : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி. சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் ஆன்டி நாயகன் கோபி கேரக்டரில் நடித்து வருகிறார் சதீஷ். இவருடைய செயல்பாடுகள் கடுப்பை ஏற்படுத்தினாலும் ஏராளமான ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறியுள்ளார் கோபி. சமீபத்தில் இவர் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்த நிலையில், ஏராளமான ரசிகர்களை அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
ராதிகாவை திருமணம் செய்வதற்காக பாக்கியாவையும் தன்னுடைய குடும்பத்தையும் துறந்து பாக்கியாவை விவாகரத்து செய்கிறார் கோபி. தொடர்ந்து ராதிகாவை கன்வின்ஸ் செய்து ஏராளமான பிரச்சினைகளுக்கு இடையில் திருமணமும் செய்கிறார். ஆனால் அவர் நினைத்த வாழ்க்கை, ராதிகாவுடனான இரண்டாவது திருமணத்தில் அவருக்கு கிடைக்கவில்லை. தன்னுடைய முதல் வாழ்க்கையே தேவலாம் என்ற நினைப்பை ராதிகா அவருக்கு ஏற்படுத்துகிறார்.
குடிபோதையில் கோபி தன்னுடைய குடும்பத்தினருடன் ஒருநாள் தங்க, அங்கேயே வந்து செட்டில் ஆகிறார் ராதிகா. இதனால் கோபியின் அம்மா ஈஸ்வரிக்கும் அவருக்கும் மிகவும் அதிகமாக சண்டை ஏற்படுகிறது. அவரை வீட்டை விட்டு துரத்தும் முயற்சியில் ஈஸ்வரி தொடர்ந்து ஈடுபடுகிறார். இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூவும் அந்த வீட்டிற்கே வந்துவிட, பிரச்சினைகள் எந்த ரூபத்தில் வரும் என்று முழி பிதுங்குகிறார் கோபி.
இந்நிலையில் இனியாவை தேர்வுக்கு அழைத்து செல்ல கிளம்புகிறார் கோபி. அவர்கள் கிளம்பும் நேரம் பார்த்து அங்கே வரும் ராதிகா, தனக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதால், மயூவை பள்ளியில் டிராப் செய்ய வேண்டும் என்று கோபியிடம் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி கடுமையான எதிர்ப்பை காட்டுகிறார். இதனால் இனியா தேர்வுக்கு செல்லும் நேரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு அவர் தவிப்புடன் காத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையை சமாளிக்க தன்னுடைய மகன் எழிலை, அழைத்து இனியாவை பள்ளியில் ட்ராப் செய்ய சொல்கிறார் பாக்கியா. இதனால் கோபமடையும் ஈஸ்வரி, இனியாவின் அப்பா தானே கோபி, அவன்தானே இனியாவை பள்ளியில் டிராப் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் பாக்கியா, தேர்வு நேரத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம் என்று அந்த சூழலை அமைதியாக்குகிறார். இதனால் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் ராதிகா மீது கோபமடைகின்றனர்.