ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட நாற்பது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுமின்றி இருந்ததாகவும், ரயில் தடத்தில் இருந்த மேல் நிலை மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் மீட்பு பணியை மேற்பார்வையிட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று ரயில்வே காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலும், பல பயணிகள் இடிபாடுகள் மற்றும் மின்சாரம் தாக்கியதாலேயே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.