ரூ.10,000 -ஐ விட குறைந்த விலையில் அசத்தலான Smart LED TV: பிளிப்கார்ட் அதிரடி

மலிவான எல்இடி டிவி: இந்த நவீன யுகத்தில், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் எல்இடி டிவி-கள் இருப்பதை காண்கிறோம். இவற்றில் ஆதிக தெளிவு இருப்பதோடு, இவை அதிக இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. பெரிய அளவிலான  எல்இடி டிவி, அதாவது சுமார் 32 இன்ச் அளவுக்கு பெரிய எல்இடி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் இந்த அளவு தொகையை நம்மால் செலவிட முடிவதில்லை. சிலருக்கு டிவி வாங்க இந்த தொகை சற்று அதிகமாக இருக்கின்றது.

சிறிய பட்ஜெட்டில் ஸ்மார்ட் டிவி வாங்க எண்ணம் கொண்டவர்கள் தங்களுக்கு விருப்பமான டிவி-யின் விலை குறையும் வரை காத்திருக்க வேண்டி இருக்கின்றது. அல்லது அவர்கள் மலிவான டிவி-ஐ வாங்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சிலரது வீடுகளில் ஏகனவே 1 அல்லது 2 ஸ்மார்ட் டிவி -க்கள் இருக்கும், இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக வாங்கும் டிவி -ஐ அவர்கள் குறைந்த விலை டிவி -யாக வாங்க நினைப்பார்கள். 

பட்ஜெட் காரணமாக டிவி வாங்குவதில் தயக்கம் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். ரூ. 10,000 -ஐ விட குறைவான விலையில் வாங்கக்கூடிய 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

KODAK 7XPRO தொடர் 80 செமீ (32 அங்குலம்) HD தயார் LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி -யின் விலை ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ரூ. 18,499 ஆகும். எனினும், இதில் நல்ல செய்தி என்னவென்றால், பிளிப்கார்ட்டில் இந்த எல்இடி டிவி -ஐ வாங்கினால் 45% பெரும் தள்ளுபடி கிடைக்கின்றது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இந்த 32 இன்ச் டிவியை வாங்க 9,999 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். 

இந்த எல்இடி டிவியில் கிட்டத்தட்ட பாதி அளவு தொகைக்கு தள்ளுபடி வழங்கப்படுவதால், குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி -யை வாங்குவது உங்களுக்கு லாபகரமான டீலாக இருக்கும். 

இந்த எல்இடி டிவி -இன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் 24 வாட் ஸ்பீக்கர்களைப் பெறுகிறார்கள். இது அடுத்த நிலை ஆடியோ தரத்தை வழங்குகிறது. மேலும் சிறந்த செயல்திறனுக்கான கோல்ட் கோர் செயலியும் இதில் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

தாம்சன் ஆல்பா 80 செமீ (32 இன்ச்) HD தயார் LED ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 30 W ஒலி வெளியீடு & பெசல்-குறைவான வடிவமைப்பு (32Alpha007BL)

Thomson’s Alpha smart LED TV -யின் அசல் விலை 14,999 ரூபாய் ஆகும். எனினும், ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து இதை வாங்கும் போது 43% பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரும் தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை வெறும் 8,499 ரூபாய்க்கு வாங்க முடியும். 

இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் டிஸ்பிளே அளவு மற்றும் அதில் காணப்படும் அடுத்த நிலை அனுபவம் பயனர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் வைஃபையுடன் ஃப்ரேம்லெஸ் டிஸ்பிளேவைப் பெறுகிறார்கள். அதில் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மிக நேர்த்தியான வித்தியாசமான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.