இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
“ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!
லியோ படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்திருக்கிறது. படத்தின் உரிமங்களை விற்பனை செய்ததன் மூலம் தான் இத்தனை கோடி கிடைத்திருக்கிறது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
லியோ படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமம் ரூ. 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. விஜய்யின் கோட்டையான கேரளாவில் லியோ படத்தின் தியேட்டர் உரிமம் ரூ. 16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் தான் கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படமாக இருந்தது. இந்நிலையில் 2.0 படத்தின் சாதனையை லியோ முறியடித்துவிட்டது.
கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அதனால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் படம் என்றாலே நம்பி வாங்குகிறார்கள். கேரளாவில் லியோ செய்திருக்கும் சாதனை பற்றி தான் தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
லியோவை பான் இந்திய படமாக எடுத்து வருகிறார்கள். லியோ தமிழ் ரசிகர்களுக்கான படமாக இருந்தால் போதும் என விஜய் தெரிவித்திருக்கிறார். இல்லை சார், இதை கண்டிப்பாக பான் இந்திய படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் வலியுறுத்திய பிறகே விஜய் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
லியோவில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் தத் நடிப்பதால் தான் லியோவை பான் இந்திய படமாக எடுக்கிறார்கள் என பேச்சு கிளம்பியது. ஒரு படத்தை அதன் கதைக்காக தான் பான் இந்திய படமாக எடுக்க வேண்டுமே தவிர ஒரு நடிகருக்காக அல்ல என லியோ படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
Trisha:பிரபல நடிகரின் இரட்டை பிள்ளைகளை வாழ்த்திய த்ரிஷா: அந்த செல்லம் தான் லியோ விஜய்யின் மகளா?
லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நடிகர் அர்ஜுனனின் இரட்டை குழந்தைகளான இளன், இயலுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டா ஸ்டோரீஸில் புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, இயல் தான் விஜய், த்ரிஷாவின் மகளாக நடிக்கிறார் போன்று என பேசத் துவங்கிவிட்டார்கள்.
தற்போது லியோ படத்தில் வரும் விஜய்யின் ஓபனிங் பாடலை ஷூட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் சேர்ந்து 500 பேர் ஆடுகிறார்களாம்.
ஷங்கர் படத்தை போன்று லியோ அறிமுக பாடல் பிரமாண்டமாக இருக்குமாம். அந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் விஜய்க்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வந்த வாத்தி கமிங் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோவின் கதை எல்.சி.யூ.வா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். கதையை மட்டும் கேட்காதீர்கள் என கறாராக சொல்லிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையே படம் துவங்கியதுமே வில்லன்கள் த்ரிஷாவை கொலை செய்துவிடுவார்கள். அதற்காக விஜய் பழிவாங்குவது தான் கதை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று படத்தின் போஸ்டர் அல்லது Glimpse வெளியிடப் போகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.