பிபோர்ஜாய் புயல் தற்போது மிகக் கடுமையான புயலாக உள்ளதாகவும் வேகமாக தீவிரமடைந்து வருவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிபோர்ஜாய்அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒருத்தருக்கு மட்டும் தமிழ் நாட்டோட வளர்ச்சி தெரியவே இல்ல… ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்!பேரழிவு என்று பொருள்இந்த பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்பது பெங்காலி மொழி ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் disaster, danger என்று அர்த்தம் ஆகும். தமிழில் பேரழிவு, ஆபத்து என்று பொருள். இந்த பிபோர்ஜாய் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரை நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
பஸ்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணி போற நபரா நீங்க? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு… இன்று முதல்!கடுமையான புயல்இந்நிலையில் பிபோர்ஜாய் புயலின் தற்போதைய நிலை குறித்து தனியார் வானிலை ஆய்வு தளமான வெதர் ஃபோர்கேஸ்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி பிபோர்ஜாய் புயல் இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேக காற்றுடன் 974hpa சுற்று மைய அழுத்தத்துடன் கூடிய மிகக் கடுமையான புயலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவானாலும் அழகு குறையல… பிரணிதாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!வேகமாக தீவிரமடைகிறதுஇந்த புயல் வேகமாக தீவிரமடைந்து வருகிறது என்றும் அடுத்த 16 முதல் 24 மணி நேரத்தில் ஒரு பெரிய புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தற்போது அதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபோர்ஜாய் புயலால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பேர் பலி? அதிகாரிகள் தகவலால் அதிர்ச்சி!பெரிய புயலாகிறது